×

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை விடுதியில் சமையலர், காவலர், தூய்மை பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

பெரம்பலூர்,மே.6: மாவட்டங்களில் உள்ள சமையலர், காவலர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூரில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஞாயி ற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.சங்க மாநிலத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் மலையாளன், தங்கமணி, மூக்கையன், கோவிந்தராஜன், பார்வதி, பிச்சாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சங்க பொருளாளர் பெரியசாமி வரவேற்றார். மாநில சங்க நிறுவனர் தங்கவேல் பொதுக்குழு துவக்க உரையாற்றினார். கூட்டத் தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில தலைவர் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஏஐடியுசி தலைவர் ஞானசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரம் பலூர் மாவட்ட தலைவர் ஜெயராமன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் சிங்காரம், மாவட்ட தலை வர் அமுத கவி, ஆசிரியர் காப்பாளர் சங்க தலைவர் கள் காந்தி, ராஜா ஆசிரியர் சங்கத் தலைவர் பாலச்சந் திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பலவிடுதிகளில் சமையலர் காவலர் மற்றும் தூய்மை பணியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளதால் பணி யில் இருக்கும் சமையலர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் மாவட்டங்களில் சமையலர், காவலர்களின் பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணிமாற்று வழங்க வேண்டும்.விடுதி மாணவர்களின் நலன் கருதி இரவு காவலர் இல்லாத விடுதிகளுக்கு இரவு காவலர் நியமனம் செய்ய வேண்டும்.

சிறப்பு காலமுறைஊதியம் பெற்று அவதிப்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்கு டியினர் நலத்துறை விடுதிகளுக்கு உள்ளது போல் நமது துறைசார்ந்த பள்ளி களுக்கும் தூய்மைப் பணி யாளர் நியமனம் செய்ய வேண்டும்.மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் மாநில, அனை த்து மாவட்ட நிர்வாகிகள், மற்றும் விடுதி பணியாளர்கள் கலந்து கொண் டனர். முடிவில் மாநில தலைமை நிலைய செயலாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

The post ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை விடுதியில் சமையலர், காவலர், தூய்மை பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar Tribal Welfare Department ,Perambalur ,Tamil Nadu ,Adi Dravidar and Tribal Welfare Hostel Employees Association ,Perambalur.… ,Adi Dravidar Tribal Welfare Hostel ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...